/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முருகன் கோவிலில் பவித்ர உத்சவ விழா
/
முருகன் கோவிலில் பவித்ர உத்சவ விழா
ADDED : அக் 06, 2025 12:51 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் முருகன் கோவிலில் பவித்ர உத்சவ பெருவிழா நடந்தது.
உத்திரமேரூர் முருகன் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவித்ர உத்சவ பெருவிழா மூன்று நாட்கள் நடப்பது வழக்கம்.
இந்த கோவிலில் தினமும் நடக்கும் பூஜைகளில் ஏதேனும் குறை இருப்பின் அதை நிவர்த்தி செய்ய பவித்ர உத்சவம் நடத்தப்படுகிறது.
இந்தாண்டிற்கான பவித்ர உத்சவ பெருவிழா, கடந்த 3ல் கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு யாகசாலையில், மண்டப பூஜை, மண்டப ஆராதனம், பூர்ணாஹூதி ஆகிய பூஜைகள் நடந்தன. மாலை 7:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதை தொடர்ந்து, நேற்று, காலை 10:00 மணிக்கு பவித்ர சமர்ப்பண காட்சி நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவருக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.