/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாட்டிற்கு லாயக்கற்ற பழவேரி சாலை
/
பயன்பாட்டிற்கு லாயக்கற்ற பழவேரி சாலை
ADDED : ஆக 07, 2025 01:57 AM

பழவேரி:பழவேரியில் இருந்து பினாயூர் செல்லும் சாலை கனரக வாகனங்களால் சேதம் அடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரியில் இருந்து, பினாயூர் மலையடிவாரம் வழியாக திருமுக்கூடல் இணைப்பு சாலை உள்ளது.
சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள், இச்சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.
இரவு, பகலாக செல்லும் கனரக வாகனங்களால் இச்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
பழவேரி சுண்ணாம்புக்குளம் முதல், திருமுக்கூடல் பாலாற்று பாலம் வரையிலான சாலை கனரக வாகனங்களால் மிகவும் சேதம் அடைந்து பயன் பாட்டிற்கு லாய்கற்று உள்ளது.
இதனால், இச்சாலை வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.
மேலும், தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களால் சாலையில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் கொட்டி கிடக்கின்றன.
எனவே, இச்சாலை பகுதிகளில் குவிந்துள்ள ஜல்லி கற்களை அப்புறப்படுத்துவதோடு, பழுதான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.