ADDED : அக் 25, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: -புலிப்பாக்கத்தில், சாலையை கடக்க முயன்றவர் பைக் மோதி நேற்று உயிரிழந்தார்.
சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கிளக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 65; மாடு வியாபாரி. இவர், நேற்று மதியம் 3:00 மணியளவில், புலிப்பாக்கம் கிராமத்திற்கு மாடு வாங்க சென்றார்.
பின், கிளக்காடிக்கு நடந்தே செல்வதற்கு, புலிப்பாக்கத்தில் உள்ள பள்ளியகரம் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, பள்ளியகரத்தில் இருந்து இடையம்புதுார் நோக்கி வந்த, 'ஹோண்டா யூனிகார்' பைக், கன்னியப்பன் மீது மோதியது. அதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

