/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபாதையோரம் வளர்ந்துள்ள செடிகளால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

ADDED : அக் 25, 2025 11:41 PM

காஞ்சிபுரம்: முத்தியால்பேட்டையில் நடைபாதையோரம் வளர்ந்துள்ள செடிகளால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, முத்தியால்பேட்டை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில் நடந்து செல்வோர் விபத்தில் சிக்குவதை தவிர்க்க சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடைபாதையோரம் செடிகள் நீண்டு வளர்ந்துள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்தாமல், சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
எனவே, முத்தியால்பேட்டையில், நடைபாதையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.