/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : ஏப் 22, 2025 12:26 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், வடக்கு மாட வீதி வழியாக, பஞ்சுபேட்டை, கருப்படிதட்டடை, பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இச்சாலையோரம் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காதாதால், நடைபாதையை மறைக்கும் வகையில், சீமை கருவேல மரக்கிளைகள் சாலை பக்கம் வரை படர்ந்து உள்ளன.
இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சாலையில் நடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, சீமை கருவேல மரத்தின் முட்கள், உடல் பாகங்களை பதம் பார்த்து விடுகின்றன.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடைபாதையை மறைக்கும் வகையில், சாலையோரம் படர்ந்துள்ள சீமை கருவேல முட்செடிகளை வேருடன் அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.