/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளைகேட்டில் கால்வாய் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
வெள்ளைகேட்டில் கால்வாய் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
வெள்ளைகேட்டில் கால்வாய் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
வெள்ளைகேட்டில் கால்வாய் சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : ஜன 13, 2024 12:46 AM

திம்மசமுத்திரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், திம்மசமுத்திரம் ஊராட்சி, சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளைகேட் பகுதியில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன், இச்சாலையில் வேகமாக வந்த சுற்றுலா பேருந்து, வெள்ளைகேட் மேம்பாலம் அருகில், சாலையோர மழைநீர் கால்வாய் மீது மோதியதில், கால்வாய் தளம் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், இரவு நேரத்தில் சாலையோரம் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மேய்ச்சலுக்காக வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கால்வாயில் தவறி விழுந்து விடுகின்றன.
நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இக்கால்வாயை சீரமைக்க கோரி, திம்மசமுத்திரம் ஊராட்சி நிர்வாகத்தினர் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, சாலையோரம்சேதமடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.