/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் ‛மேன்ஹோல்' சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
கால்வாய் ‛மேன்ஹோல்' சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
கால்வாய் ‛மேன்ஹோல்' சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
கால்வாய் ‛மேன்ஹோல்' சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : பிப் 05, 2025 12:13 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து வையாவூர் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக கோனேரிகுப்பம், ஏனாத்துார், களியனுார், நத்தப்பேட்டை முத்தியால்பேட்டை, ராஜகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
இதில், ரயில் நிலையம் ஒட்டியுள்ள பெட்ரோல் பங்க் அருகில், சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்வாய் ‛மேன்ஹோல்' மீது மூடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாப் சேதமடைந்து, உடைந்த நிலையில் உள்ளது.
இதனால், இச்சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், கவனக்குறைவாக திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த ‛மேன்ஹோல்' சிலாப்பை அகற்றிவிட்டு, புதிதாக ‛மேன்ஹோல்' மூடி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.