/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாய் ‛'மேன்ஹோல்' சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
வடிகால்வாய் ‛'மேன்ஹோல்' சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
வடிகால்வாய் ‛'மேன்ஹோல்' சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
வடிகால்வாய் ‛'மேன்ஹோல்' சேதம் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : மே 18, 2025 11:06 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சாலை வழியாக புதிய ரயில் நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னை செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், குள்ளப்பன் தெரு சந்திப்பில், சாலையின் தரைமட்டத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாய், 'மேன்ஹோல்' மூடி சேதமடைந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் இருருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சேதமடைந்த கால்வாயால் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சேதமடைந்த நிலையில் உள்ள 'மேன்ஹோல்' கான்கிரீட் சிலாப் மூடியை அகற்றிவிட்டு, புதிய கான்கிரீட் சிலாப் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.