/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறந்து கிடக்கும் 'மேன்ஹோல்' விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
/
திறந்து கிடக்கும் 'மேன்ஹோல்' விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
திறந்து கிடக்கும் 'மேன்ஹோல்' விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
திறந்து கிடக்கும் 'மேன்ஹோல்' விபத்தில் சிக்கும் பாதசாரிகள்
ADDED : ஜன 02, 2026 05:23 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், திறந்து கிடக்கும், நடைபாதை அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்வாயில், திறந்து கிடக்கும் மேல்மூடியை கான்கிரீட்டால் மூட வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் தெரு அருகில், மழைநீர் வடிகால்வாயின் மேல் மூடி மூடப்பட்டிருந்த கான்கிரீட் உடைந்துள்ளதால், கால்வாய் திறந்த நிலையில் உள்ளது.
இதனால், நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள், திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால்வாய் மேல், கான்கிரீட் மூடியால் மூட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.