/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்று பெறலாம்
/
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்று பெறலாம்
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்று பெறலாம்
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்று பெறலாம்
ADDED : அக் 27, 2024 07:58 PM
காஞ்சிபுரம்:ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தே டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்று பெறலாம் என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
மத்திய, மாநில அரசு, வருங்கால வைப்பு நிதி திட்டம், ராணுவம் மற்றும் பிற ஓய்வூதியம் பெறுவோர் நவ.,1ம் தேதி முதல் தங்களின் உயிர் வாழ்வு சான்றினை கருவூலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே, தபால் துறை வாயிலாக டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்று பெறலாம். பயோமெட்ரிக் அல்லது பேஸ் ஆர்.டி., ஆப் முறையில் டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்று வழங்கப்படும்.
எனவே, ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் தபால்காரர்களை தொடர்பு கொண்டு சான்றினை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx இணையதளம் அல்லது ‛post info' செயலி பதிவிறக்கம் செய்து, உயிர்வாழ்வு சான்றுக்காக கோரிக்கையை பதிவு செய்யலாம்.
தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல்போன் எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, 70 ரூபாய் கட்டணம் செலுத்தி கைவிரல் ரேகையை பதிவு செய்தால், சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர் வாழ்வு சான்று சமர்ப்பிக்கப்படும்.
ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்த படியே அந்தந்த பகுதி தபால்காரர்கள் வாயிலாக சான்றினை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.