/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓய்வூதியர்கள் முறையீடுகள் வரும் 7க்குள் அனுப்பலாம்
/
ஓய்வூதியர்கள் முறையீடுகள் வரும் 7க்குள் அனுப்பலாம்
ஓய்வூதியர்கள் முறையீடுகள் வரும் 7க்குள் அனுப்பலாம்
ஓய்வூதியர்கள் முறையீடுகள் வரும் 7க்குள் அனுப்பலாம்
ADDED : ஜன 28, 2025 07:43 PM
காஞ்சிபுரம்:ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம், பிப்ரவரி 20ம் தேதி காலை 10:30 மணிக்கு கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் மற்றும் கருவூல துறை அலுவலக கூடுதல் இயக்குனர்(நிர்வாகம்) ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் இருந்தால், அதற்கான முறையீடுகளை மூன்று நகல்களில், காஞ்சிரம் கலெக்டருக்கு பிப்ரவரி 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இக்கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பில், ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி மட்டும் பங்கேற்கலாம்.
பிப்ரவரி 7ம் தேதிக்குள் பெறப்படும் முறையீடுகளின் மீது மட்டுமே குறைகளைவு அறிக்கையை சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று, பிப்ரவரி 20ல் நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விபரம் தெரிவிக்கப்படும்.
எனவே, ஓய்வூதியர்கள் தங்கள் முறையீடுகளை வரும் 7க்குள், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.