/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வீட்டுமனைக்கு பாதை அமைப்பு பள்ளம் வெட்டி தடுத்த மக்கள்

ADDED : அக் 12, 2025 12:45 AM

காஞ்சிபுரம்:அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், தனியார் வீட்டுமனைக்கு பாதை அமைத்தவர் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, மேல்பொடவூர் கிராமத்தில், புல எண்171/1ல் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில், சமூக வனத்துறை சார்பில், தைல மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.
இம்மரங்கள் முதிர்வு பெறும் போது, தமிழ்நாடு காகித ஆலைக்கு வெட்டி எடுத்து செல்கின்றனர். இதில், கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீத வருவாய் தொகை அந்த ஊராட்சிக்கு வனத்துறையினர் வழங்கி விடுகின்றனர்.
இரு தினங்களுக்கு முன், மேல்பொடவூர் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான வீட்டுமனை நிலத்திற்கு, தி.மு.க.,வைச் சேர்ந்தவர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், மண் கொட்டி பாதை அமைத்துள்ளார்.
இதை கிராம நிர்வாக அலுவலர், பள்ளம் வெட்டி தடுப்பு ஏற்படுத்தினார். ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர், வருவாய் துறை அதிகாரிகளை மிரட்டிவிட்டு, வெட்டிய பள்ளத்தை மண்ணை போட்டு மூடிவிட்டார்.
இருப்பினும், மேல் பொடவூர் கிராம மக்கள், பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, பள்ளம் வெட்டி தடுப்பு ஒருவர் ஏற்படுத்தி உள்ளார்.
தனியார் வீட்டுமனைக்கு மீண்டும் அவர் மண் பாதை அமைக்க முயற்சி செய்தால், மக்கள் ஒன்றுகூடி போராட வேண்டி இருக்கும் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.