/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் திருவிழாவிற்கு இடம் கேட்டு காவனுார் புதுச்சேரி மக்கள் மறியல்
/
கோவில் திருவிழாவிற்கு இடம் கேட்டு காவனுார் புதுச்சேரி மக்கள் மறியல்
கோவில் திருவிழாவிற்கு இடம் கேட்டு காவனுார் புதுச்சேரி மக்கள் மறியல்
கோவில் திருவிழாவிற்கு இடம் கேட்டு காவனுார் புதுச்சேரி மக்கள் மறியல்
ADDED : ஜூலை 13, 2025 12:10 AM

உத்திரமேரூர்:-காவனுார் புதுச்சேரியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்த இடம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர் தாலுகா, காவனுார் புதுச்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மூன்று நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த திருவிழாவிற்காக தனி நபருக்கு சொந்தமான இடத்தில், வழக்கமாக அம்மன் ஜோடிப்பு செய்து வந்தனர்.
தற்போது, அந்த இடத்தில் இரும்பு தகர கொட்டகை அமைக்கப்பட்டு, அதை சுற்றியும் வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு திருவிழா வரும் ஜூலை 27, 28, 29 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது.
இதற்காக, அம்மனை ஜோடிப்பு செய்வதற்கு மூன்று நாட்களுக்கு இடம் வழங்குமாறு, கிராம மக்கள் தனி நபரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தர மாட்டேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, கிராம மக்கள் தனி நபரின் இரும்பு தகர கொட்டகையின் கூரையை பெயர்த்து வீசி உள்ளனர். தொடர்ந்து, உத்திரமேரூர் -- மதுராந்தகம் சாலையில் அமர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் சம்பவ இடத்திற்கு சென்று, கிராம மக்களிடம் பேச்சு நடத்தினார்.
இரண்டு மணி நேரமாக நடந்த சாலை மறியலை கைவிட மறுத்த, கிராம மக்கள் 67 பேரை போலீசார் கைது செய்து, உத்திரமேரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின் விடுவித்தனர்.