/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிமென்ட் கல் சாலையை சீரமைக்க கோனேரி மக்கள் வலியுறுத்தல்
/
சிமென்ட் கல் சாலையை சீரமைக்க கோனேரி மக்கள் வலியுறுத்தல்
சிமென்ட் கல் சாலையை சீரமைக்க கோனேரி மக்கள் வலியுறுத்தல்
சிமென்ட் கல் சாலையை சீரமைக்க கோனேரி மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 24, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, ராமகிருஷ்ணன் தெருவிற்கு, 2017ம் ஆண்டு, சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், சிமென்ட் கல் சாலையிலும், சாலையோரத்திலும், புல், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால், விஷ ஜந்து நடமாட்டம் உள்ளதால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்ல பகுதிவாசிகள்அச்சப்படுகின்றனர்.
எனவே, ராமகிருஷ்ணன் தெரு, சிமென்ட் கல் சாலையில் வளர்ந்துள்ள புல் மற்றும் செடி, கொடிகளை அகற்ற, கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது.