/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலையில் பள்ளம் பால்நல்லுார் மக்கள் சீரமைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 19, 2025 01:00 AM

ஸ்ரீபெரும்புதுார்:பால்நல்லுாரில் மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளதை சீரமைக்க வேண்டும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பால்நல்லுார் ஊராட்சியில், 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களின் அன்றாட தேவைக்காக, ஆரநேரி சாலை வழியாக ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையின் குறுக்கே, பால்நல்லுார் ஏரிக்கு உபரி நீர் செல்லும் கால்வாய் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில், கால்வாயில் அதிக படியாக சென்ற வெள்ளநீர், சாலையை மூழ்கடித்து சென்றது.
இதனால், சாலையின் இருபுறங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரங்களில் பள்ளங்களாக மாறியன. இதனால், இவ்வழியாக வரும் வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் விபத்தில் சிக்கி வருகின்றனர். எதிதெிரே வாகனங்கள் வரும் போது, சிறு கால்வாயை கடக்க சிரமம்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் இருசக்கர வாகனங்கள் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, பால்நல்லுார் சாலையில் மண் அரிப்பினால் ஏற்பட்ட சேதத்ததை சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.