/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மேன்ஹோல்' வழியே வெளியேறும் கழிவுநீரால் சிவந்தாங்கல் மக்கள் அவதி
/
'மேன்ஹோல்' வழியே வெளியேறும் கழிவுநீரால் சிவந்தாங்கல் மக்கள் அவதி
'மேன்ஹோல்' வழியே வெளியேறும் கழிவுநீரால் சிவந்தாங்கல் மக்கள் அவதி
'மேன்ஹோல்' வழியே வெளியேறும் கழிவுநீரால் சிவந்தாங்கல் மக்கள் அவதி
ADDED : ஜூன் 25, 2025 01:43 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட சிவந்தாங்கல் பகுதியில், மூன்று மாதங்களுக்கு மேலாக, 'மேன்ஹோல்' வழியாக வெளியேறி சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, 7வது வார்டு சிவந்தாங்கல் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோல் மூடி வழியாக கழிவுநீர் சாலையில் வெளியேறி வழிந்து வருகின்றது.
இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மூன்று மாதங்களாக இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை, 'மேன்ஹோல்' வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து வருகிறது.
இதனால், இப்பகுதி மக்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. குழந்தைகள் விளையாடக்கூட வெளியில் வர முடியாத சூழல் உள்ளது.
மேலும், மழை வரும் போது, மேன்ஹோல் வழியே கழிவுநீர் பொங்கி வருகிறது.
எனவே, பாதாள சாக்கடை குழாய் அடைப்பை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.