/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழ்வாக செல்லும் மின் கம்பிக்கு மரக்கம்பால் முட்டு கொடுத்த மக்கள்
/
தாழ்வாக செல்லும் மின் கம்பிக்கு மரக்கம்பால் முட்டு கொடுத்த மக்கள்
தாழ்வாக செல்லும் மின் கம்பிக்கு மரக்கம்பால் முட்டு கொடுத்த மக்கள்
தாழ்வாக செல்லும் மின் கம்பிக்கு மரக்கம்பால் முட்டு கொடுத்த மக்கள்
ADDED : ஜூலை 04, 2025 01:21 AM

உத்திரமேரூர்:முருக்கேரியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளுக்கு மரக்கம்பால், அப்பகுதி மக்கள் முட்டு கொடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், முருக்கேரி துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து, அழிசூர் செல்லும் சாலை 2 கி.மீ., துாரம் உள்ளது.
இந்த சாலையின் ஓரங்களிலும், அதை சுற்றியுள்ள விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின் வாரியம் சார்பில், மின் கம்பங்கள் நடப்பட்டு, மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த சாலையின் குறுக்கே மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் மீது மின் கம்பிகள் உரசி, மின் விபத்து ஏற்படும் சூழல் இருந்தது.
இதை தவிர்க்க, அப்பகுதி மக்கள், மரக்கம்பால் முட்டு கொடுத்து, மின் கம்பிகளை உயர்த்தியுள்ளனர். மழை மற்றும் புயல் காற்று நேரங்களில் கம்பு விலகினால், அப்பகுதியில் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, முருக்கேரி பகுதியில் மின் கம்பிகளை தாங்கியுள்ள மரக்கம்பை அகற்றி, மின் கம்பம் நட மின்வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.