/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கிணறு அமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கிணறு அமைக்க மக்கள் வலியுறுத்தல்
மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கிணறு அமைக்க மக்கள் வலியுறுத்தல்
மேட்டுப்பாளையத்தில் குடிநீர் கிணறு அமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 27, 2025 11:39 PM

உத்திரமேரூர்: மேட்டுப்பாளையத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, புதிதாக குடிநீர் கிணறு அமைக்க, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி ஊராட்சியில் உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் 30 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, 20 ஆண்டுக்கு முன் கம்மாளம்பூண்டி ஏரியில் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த பெஞ்சல் புயலின்போது ஏரியில் தண்ணீர் நிரம்பிய தால், அங்குள்ள குடிநீர் கிணறு தண்ணீரில் மூழ்கியது.
இதையடுத்து, மேட்டுப் பாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே உள்ள, திறந்தநிலை கிணற்றில் இருந்து, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் கிணற்றில் பறவைகளின் எச்சமும், பிளாஸ்டிக் கழிவுகளும் கலந்து, தண்ணீர் மாசடைந்து உள்ளது. இதனால், அப்பகுதி சிறுவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில், ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை.
எனவே, மேட்டுப் பாளையத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, அப்பகுதியில் புதிதாக குடிநீர் கிணறு அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

