/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்கள் குறைதீர் கூட்டம் 206 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டம் 206 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜன 08, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 206 பேர் மனு அளித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நான்கு பயனாளிகளுக்கு, கருணை அடிப்படையில், அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணைகளை, கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.
மேலும், இந்திய குழந்தைகள் நல கூட்டமைப்பு சார்பில், 11 பழங்குடியின மாணவ - மாணவியருக்கு, மிதிவண்டிகளையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.