/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாட்டிற்கு லாயக்கற்ற பேரணக்காவூர் கிராம சாலை
/
பயன்பாட்டிற்கு லாயக்கற்ற பேரணக்காவூர் கிராம சாலை
ADDED : ஜன 29, 2024 04:13 AM

உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இருந்து, சாலவாக்கம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இச்சாலையில், பட்டா அடுத்த காவணிப்பாக்கம் காப்புக்காடு அருகே, பேரணக்காவூர் செல்லும் 2 கி.மீ., துாரம் கொண்ட சாலை உள்ளது.
பேரணக்காவூர் கிராம மக்கள் இந்த சாலை வழியாக சாலவாக்கம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இச்சாலை, இரண்டு ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
மின்வசதி இல்லாத இந்த சாலையில், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, பேரணக்காவூர்கிராம சாலையை சீரமைத்துத் தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.