ADDED : ஜன 28, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: அரசு போக்குவரத்து கழகம், காஞ்சிபுரம் மண்டலம், ஓரிக்கையில் உள்ள தொழிற்கூட மேலாளருக்கு, பணித்திறன் நற்சான்று விருது வழங்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில், நேற்று முன்தினம் குடியரசு தின விழா நடந்தது. இதில், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள ஆறு மண்டலங்களில் உள்ள 55 பணிமனைகளில், காஞ்சிபுரம் மண்டலம், ஓரிக்கையில் உள்ள தொழிற்கூட தகுதிச்சான்று மேலாளர் கருணாகரனுக்கு, சிறந்த பணித் திறன் நற்சான்று விருது வழங்கப்பட்டது.
மண்டல பொது மேலாளர் கிருஷ்ணமூர்த்தி விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
