ADDED : பிப் 22, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், தெற்கு கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் சுனில்குமார் தலைமை வகித்தார்.
இதில், வாலாஜாபாத் ஒன்றியம், களியனுாரில் தாழ்வாக தொங்கும் மின் ஒயர்களை சீரமைக்கவும், மின்னழுத்த குறைபாடு உள்ளதால் சீரான மின்சாரம் வழங்க கோரியும் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம், இரு மனுக்களை அளித்தார்.
மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.