/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு அமைக்கக்கோரி மனு
/
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு அமைக்கக்கோரி மனு
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு அமைக்கக்கோரி மனு
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின்விளக்கு அமைக்கக்கோரி மனு
ADDED : ஏப் 29, 2025 12:56 AM
வாலாஜாபாத்,
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறை கேட்பு முகாமில், வாலாஜாபாத் பேரூராட்சி ம.தி.மு.க., செயலர் சிவக்குமார், கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தார்.
மனு விபரம்
வாலாஜாபாத் - ஒரகடம் சாலையில், வாலாஜாபாத் அரசு மருத்துவமனை அடுத்து ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பால மும்முனை கூட்டுச்சாலை பகுதியில், இதுவரை மின்வசதி மற்றும் போதுமான தடுப்புகள், பாலத்தின் பக்கவாட்டில் மண் அணைக்காமல் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது.
இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வாலாஜாபாத் ரயில்வே பாலம் மீது, உயர் கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த தொடர்ந்து மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
கடந்த ஆண்டு ஜூலையில், வாலாஜாபாத் பேரூராட்சி செயலரிடத்திலும், கடந்த பிப்ரவரியில் காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கும், மார்ச் மாதம் தமிழக முதல்வர், தனிப்பிரிவு மற்றும் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் நினைவூட்டல் கடிதம் என, தொடர்ந்து மனுக்கள் வழங்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, இதுகுறித்து தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.