/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோட்டூரில் ரேஷன் கடை திறக்க டி.ஆர்.ஓ.,விடம் மனு
/
கோட்டூரில் ரேஷன் கடை திறக்க டி.ஆர்.ஓ.,விடம் மனு
ADDED : நவ 03, 2025 11:00 PM
காஞ்சிபுரம்: கோட்டூர் கிராமம், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் ரேஷன் கடை திறக்க வேண்டுமென மக்கள் குறைதீர் கூட்டத்தில், பெண்கள் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், நேற்று காலை 11:00 மணிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. இதில், ஆதிதிராவிடர் பகுதிவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு, ரேஷன் கடை அமைக்க வேண்டி பெண்கள் மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் கிராமத்தில், ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு ரேஷன் கடை இல்லாததால், 2 கி.மீ., நடந்து சென்று, ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது.
எனவே கோட்டூர் கிராமம் ஆதிதிராவிடர் பகுதியில், புதிதாக ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

