/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களியப்பேட்டையில் கிராம சபை கூட்டம் நடத்த மனு
/
களியப்பேட்டையில் கிராம சபை கூட்டம் நடத்த மனு
ADDED : ஆக 13, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்: - களியப்பேட்டை கிராமத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பில் கிராம சபை கூட்டம் நடத்த, மாவட்ட குறைத்தீர் கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வியிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
மனு விபரம்:
களியப்பேட்டை கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் நான்கு ஆண்டுகளில் ஒரே முறைதான் கிராம சபை கூட்டம் நடத்தப் பட்டுள்ளது.
நாளை மறுதனம் நடைபெறும் சுதந்திர தின கிராம சபை கூட்டம், களியப்பேட்டை ஆதிதிராவிடர் குடியிருப்பில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் உள்ளது.