/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இறுதி சடங்கு தொகையை உயர்த்தி வழங்க மனு
/
இறுதி சடங்கு தொகையை உயர்த்தி வழங்க மனு
ADDED : டிச 03, 2025 06:34 AM
காஞ்சிபுரம்: வங்கி ஊழியர்கள் பணி காலத்தில் உயிரிழந்தால் இறுதி சடங்கிற்கு வழங்கும் தொகையை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி சிப்பந்திகள் முன்னேற்ற சங்க பொது செயலர் தேவராசன், வங்கியின் மேலாண்மை இயக்குநருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனு விபரம்:
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பணி காலத்தில் உயிரிழந்தால் இறுதி சடங்கிற்கு 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது உள்ள நிலைமையை கருத்தில் கொண்டு, பணி காலத்தில் உயிரிழந்தால் இறுதி சடங்கிற்கு 25,000 ரூபாயில் இருந்து, 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

