/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலைக்கான தடையின்மை சான்று ரத்து கோரி காஞ்சி கலெக்டரிடம் மனு
/
தொழிற்சாலைக்கான தடையின்மை சான்று ரத்து கோரி காஞ்சி கலெக்டரிடம் மனு
தொழிற்சாலைக்கான தடையின்மை சான்று ரத்து கோரி காஞ்சி கலெக்டரிடம் மனு
தொழிற்சாலைக்கான தடையின்மை சான்று ரத்து கோரி காஞ்சி கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 15, 2024 09:51 PM
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த தரணிதரன் என்பவர், தனியார் தொழிற்சாலைக்கான தடையின்மை சான்றை ரத்து செய்யக்கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தார்.
மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
வாலாஜாபாத் ஒன்றியம், உள்ளாவூர் கிராமத்தில், 240 ஏக்கர் பரப்பிலான நன்செய் விளை நிலங்களை தனியார் நிறுவனத்தினர் விலைக்கு வாங்கி உள்ளனர்.
இந்த இடங்களில் தற்போது தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக, நில உரிமையாளர்களிடம் அரசு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளாமல் தடையின்மை சான்று அளித்துள்ளனர்.
மேலும், தடையின்மை சான்றில் கூறியபடி அல்லாமல், விதிமுறைகளை மீறி கட்டுமான பகுதிகளில் மண் கொட்டி நிலங்களை உயரப்படுத்துகின்றனர்.
இதனால், அருகில் உள்ள விவசாயம் செய்யும் விளைநிலங்கள், மழைக்காலங்களில் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தடையின்மை சான்றில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதோடு, தடையின்மை சான்று ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.