ADDED : மார் 28, 2026 05:46 AM
உத்திரமேரூர்: -: ஒரக்காட்டுப்பேட்டையில் உள்ள நில ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் வி.ஏ.ஓ., கோகிலாவிடம் மனு அளித்தனர்.
ஒரக்காட்டுப்பேட்டை ஊராட்சி தலைவர் ராமசந்திரன், அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒரக்காட்டுப்பேட்டை கிராமம். இக்கிராமத்தில், ஊராட்சிக்கு சொந்தமான புன்செய் நிலம் சர்வே எண்: 9/3, 9/1, 24 உள்ளது.
ஊராட்சிக்கு சொந்தமான இந்த புறம்போக்கு நிலத்தினை அப்பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தினர் சுற்று சுவர் எழுப்பியும், மண் கொட்டியும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம், சமுதா யக்கூடம் உள்ளிட்டவை கட்டமைக்க போதிய இடம் இல்லாத நிலையில் தனியார் நிறுவனம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது.
இதனால், எதிர்வரும் காலங்களில் குளம் அமைத்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல் போன்ற பொது பயன்பாட்டிற்கும் இடவசதி இல்லாத நிலை உள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றி மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
