/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ஆன்லைனில்' பட்டா பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக கலெக்டரிடம் மனு
/
'ஆன்லைனில்' பட்டா பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக கலெக்டரிடம் மனு
'ஆன்லைனில்' பட்டா பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக கலெக்டரிடம் மனு
'ஆன்லைனில்' பட்டா பதிவு செய்ய லஞ்சம் கேட்பதாக கலெக்டரிடம் மனு
ADDED : பிப் 05, 2025 08:02 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் அருகே மேல்புத்துாரைச் சேர்ந்த ராமசாமி என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
வாலாஜாபாத் வட்டம், மேல்புத்துார் கிராமத்தில், 1984ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், புலம் எண்; 89/1ல் நில எடுப்பு செய்து, 50 நபர்களுக்கு புன்செய் பட்டா வழங்கப்பட்டது.
அவை, கடந்த 1987ல் நத்தம் நிலவரி திட்டத்தில், புலம் எண்: 89/1ஏ ஆதிதிராவிடர் குடியிருப்பு என வகைபாடு மாற்றம் செய்யப்பட்டது. இதில், 22 நபர்களுக்கு மட்டும், 1993ல், 00120 ச.மீ., அளவில் நத்தம் பட்டா வழங்கப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
1433ம் பசலி வருவாய்த் தீர்வாயத்தில் மனு அளித்ததை தொடர்ந்து, மீதமுள்ள 23 நபர்கள் மற்றும் இருவரை கூடுதலாக சேர்த்து, 25 பேருக்கு 2024 ஆகஸ்டில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த பட்டாக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது.
ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு, ஒரு பயனாளி 3,000 ரூபாய் வீதம், 25 நபர்களுக்கு, 75,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என, இப்பகுதி கிராம நிர்வாக அலுவலர், அத்தொகையை வசூலிக்க இருவரை நியமித்துள்ளார். இதுகுறித்து, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.