/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சி அலுவலக கட்டட பணி தொடர கோரி கலெக்டரிடம் மனு
/
ஊராட்சி அலுவலக கட்டட பணி தொடர கோரி கலெக்டரிடம் மனு
ஊராட்சி அலுவலக கட்டட பணி தொடர கோரி கலெக்டரிடம் மனு
ஊராட்சி அலுவலக கட்டட பணி தொடர கோரி கலெக்டரிடம் மனு
ADDED : நவ 10, 2025 11:26 PM
வாலாஜாபாத்: திருவங்கரணையில், புதிதாக கட்டப்படும் ஊராட்சிமன்ற அலுவலக கட்டட பணியை மீண்டும் துவக்க கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவங்கரணை ஊராட்சிமன்ற தலைவர் தீபிகா, கலெக்டரிடம் அளித்த மனு:
வாலாஜாபாத் ஒன்றியம், திருவங்கரணையில் புதிய ஊராட்சிமன்ற அலுவலகம் கட்ட ஊராட்சி நிர்வாகத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணி செய்ய திருவங்கரணையில் சர்வே எண்; 56/2ல் உள்ள அனாதினம் புன்செய் காலிமனை தேர்வு செய்து, கடந்த ஜூலையில் பணிகள் துவங்கின.
அடித்தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த தனி நபர்கள் சிலர், காழ்ப்புணர்ச்சியால் அவ்விடத்தில் கட்டடம் கட்டக் கூடாதென, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.
இதனால், கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தங்களிடம் ஏற்கனவே கடந்த ஆக., 18ம் தேதி, மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, திருவங்கரணை ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கான கட்டட பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

