/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருவங்கரணையில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
/
திருவங்கரணையில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
திருவங்கரணையில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
திருவங்கரணையில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
ADDED : டிச 03, 2025 06:35 AM
வாலாஜாபாத்: திருவங்கரணையில், அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம், திருவங்கரணை ஊராட்சி தலைவர் தீபிகா மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது திருவங்கரணை கிராமம். நான், இக்கிராமத்தில் ஊராட்சி தலைவராக உள்ளேன். இப்பகுதயில், அரசுக்கு சொந்தமான சர்வே எண் 53/4 - ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலத்தை இதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்கக் கோரி, கடந்த ஜூலை 29ம் தேதி, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்கனவே மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே, திருவங்கரணை ஊராட்சியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு அரசு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.