/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக தண்ணீர் விற்பதை தடுக்க கலெக்டரிடம் மனு
/
தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக தண்ணீர் விற்பதை தடுக்க கலெக்டரிடம் மனு
தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக தண்ணீர் விற்பதை தடுக்க கலெக்டரிடம் மனு
தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக தண்ணீர் விற்பதை தடுக்க கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 04, 2025 10:02 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தைச் சேரந்த யஸ்வந்த்ராவ் என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் புகார் மனு அளித்தார்.
மனு விபரம்:
ஊத்துக்காடு கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளின் பல்வேறு உபயோகத்திற்கு தேவையான தண்ணீரை, இப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் விதிகளை மீறி விற்பனை செய்து வருகிறார். அதாவது விவசாயத்திற்காக அரசு வாயிலாக வழங்கப்படும் இலவச மின் இணைப்பை பயன்படுத்தி, தன் கிணற்றில் இருந்து, விவசாய மின் மோட்டார் வாயிலாக இரவு, பகலாக தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.
மேலும், கிணற்றில் இருந்து உறிஞ்சும் தண்ணீரை, டேங்கர் லாரி மற்றும் டிராக்டர்களில் நிரப்ப, சாலையின் குறுக்கே குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் விற்பனை செய்வதற்காக, இப்பகுதியில் தண்ணீர் உறிஞ்சப்படுவதால், எதிர் காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஊத்துக்காட்டில் அனுமதியின்றி முறைகேடாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுத்து, சட்ட விரோதமாக தண்ணீர் விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

