/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெட்ரோல், டீசல் டேங்கர் ரயில் சென்ட்ரலில் தடம் புரண்டது
/
பெட்ரோல், டீசல் டேங்கர் ரயில் சென்ட்ரலில் தடம் புரண்டது
பெட்ரோல், டீசல் டேங்கர் ரயில் சென்ட்ரலில் தடம் புரண்டது
பெட்ரோல், டீசல் டேங்கர் ரயில் சென்ட்ரலில் தடம் புரண்டது
ADDED : பிப் 15, 2024 09:55 PM

சென்னை:சென்னை, தண்டையார்பேட்டையில் ஐ.ஓ.சி.,க்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் உள்ளன. அங்கிருந்து, டேங்கர் சரக்கு ரயில் பெட்டிகளில் டீசல் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
நேற்று அதிகாலை 2:30 மணிக்கு, பெட்ரோல் நிரப்புவதற்காக, காலி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, எதிர்பாராதவிதாக சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள், பலத்த சத்தத்துடன் தண்டவாளத்தில் இருந்து விலகி, தடம் புரண்டன.
சுதாரித்த ஓட்டுனர், ரயிலை உடனடியாக நிறுத்தி, இதுகுறித்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதிகாரிகளும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்களும், சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தடம் புரண்ட ரயில் பெட்டிகளின் சக்கரங்களை, தண்டவாளத்தில் ஓடும் வகையில் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 6:00 மணிக்கு, மீட்பு பணிகள் முழுமையாக முடிந்து, ரயில் பெட்டிகள் பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
மற்றொரு ரயில்
அதேபோல், சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பிரிட்ஜ் இடையே உள்ள பணிமனையில் நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு, டீசல் ரயில் இன்ஜின் தடம் புரண்டது.
மூன்று சக்கரங்கள், தண்டவாளத்தில் இருந்து தரையிறங்கின. பணிமனையில் இருந்து இன்ஜினை வெளியே எடுத்து வந்தபோது தண்டவாளத்தில் இருந்து இன்ஜின் இறங்கியது.
இதனால், பணிமனையில் இருந்து, அடுத்தடுத்த ரயில்கள் வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. பணிமனையில் தடம் புரண்ட இன்ஜின், மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.