/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
/
அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ADDED : டிச 13, 2024 09:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்பு கண்காட்சியினை, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில், காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இதில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், கலெக்டர், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட புகைப்படங்களை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.