/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3 இடங்களில் குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் ஆறாக ஓடும் குடிநீர்
/
3 இடங்களில் குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் ஆறாக ஓடும் குடிநீர்
3 இடங்களில் குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் ஆறாக ஓடும் குடிநீர்
3 இடங்களில் குழாயில் உடைப்பு கீழ்கதிர்பூரில் ஆறாக ஓடும் குடிநீர்
ADDED : நவ 08, 2025 01:00 AM

கீழ்கதிர்பூர்: திருப்பாற்கடல் பாலாற்றில் இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு நிலத்தடி வழியாக செல்லும் குழாயில், கீழ்கதிர்பூர் பிரதான சாலையில், மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஆற்றுநீரைப் போல குடிநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 1,060க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு காஞ்சிபுரம் பாலாறு, வேலுார் மாவட்டம், திருப்பாற்கடல் பாலாறு மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பாற்கடல் பாலாறில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு நிலத்தடி வழியாக செல்லும் குழாயில், கீழ்கதிர்பூர் பிரதான சாலையில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஆற்று நீரைபோல குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், கீழ்கதிர்பூர் பிரதான சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைகிறது. காஞ்சி புரம் மாநகராட்சியில் வசிப்பவர்களுக்கு தேவையான குடிநீர் முழுமையாக செல்லாத நிலை உள்ளது.
எனவே, கீழ்கதிர்பூர் பிரதான சாலையில், மூன்று இடங்களில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

