ADDED : அக் 05, 2024 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், அக். 6--
பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம்., மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் என்.எஸ்.எஸ்., முகாம் திருப்பருத்திகுன்றத்தில் துவங்கியது.
இதில், களப்பணியாக திருப்பருத்திகுன்றம் துவக்கப் பள்ளி வளாகம், கைலாசநாதர் கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்தினர். செவிலிமேடு ஏரிக்கரையில், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து, 1,500 பனை விதைகள் நடவு செய்தனர்.
சுற்றுப்புறத் துாய்மை, கால்நடை வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாம் நிறைவு விழா, நேற்று முன்தினம், மாவட்ட கல்வி அலுவலர் சத்தியபாமா தலைமையில் நடந்தது.