/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புளியம்பாக்கம் பாலாற்றங்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
/
புளியம்பாக்கம் பாலாற்றங்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
புளியம்பாக்கம் பாலாற்றங்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
புளியம்பாக்கம் பாலாற்றங்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
ADDED : அக் 31, 2025 02:01 AM

வாலாஜாபாத்:  புளியம்பாக்கம் பாலாற்றங்கரை ஒட்டி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் நேற்று 5,000 பனை விதைகள் நடப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் மேற்கொள்ளப் படுகிறது.
அதன்படி, நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் பனை விதைகள் நடப்பட்டன. 5ம் ஆண்டுக்கான துவக்க விழா வாலாஜாபாத் ஒன்றியம், நத்தாநல்லுாரில் கடந்த 1ம் தேதி துவங்கியது.
அதன் தொடர்ச்சியாக வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் விதைகள் தன்னார்வ அமைப்பு இணைந்து, புளியம்பாக்கம் பாலாற்றங்கரையொட்டி, நேற்று, 5,000 பனை விதைகள் நட்டனர்.
இதில், வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி, ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புளியம்பாக்கம் மற்றும் பழையசீவரம் நடுநிலைப் பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்று பனை விதைகளை நட்டனர்.
காஞ்சிபுரம் வனச்சரக அலுவலர் ராமு, தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர், கோமதி, விதைகள் தன்னார்வ அமைப்பாளர் பசுமை சரண் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

