/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
/
வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
ADDED : அக் 09, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முத்தியால்பேட்டை:முத்தியால்பேட்டை ஊராட்சி, வள்ளுவப்பாக்கம் ஏரிக்கரையில், கீழம்பி எஸ்.எஸ்.கே.வி., மகளிர் கல்லுாரி, சர்வம், பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு சார்பில், 5,000 பனை விதைகள் நேற்று நடவு செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா, ரோட்டரி கிராண்ட் சங்க தலைவர் சங்கர், தொழிலதிபர் முருகேஷ் உள்ளிட்டோர் பனை விதை நடவு செய்யும் திருவிழாவை துவக்கி வைத்தனர்.
இதில், நேற்று, ஒரே நாளில், 5,000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. முத்தியால்பேட்டை ஊராட்சி தலைவர் அன்பழகன் நன்றி கூறினார்.