/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேர்க்காடு பூங்காவில் பனை விதைகள் நடவு
/
சேர்க்காடு பூங்காவில் பனை விதைகள் நடவு
ADDED : அக் 21, 2024 01:55 AM

காஞ்சிபுரம்:விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், மூன்று ஆண்டுகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட 59 நீர்நிலை ஒட்டியுள்ள கரையோர பகுதியில், மூன்று லட்சம் பனை விதைகள் நடவு செய்துள்ளனர்.
இதில், நான்காவது ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து இந்நிகழ்ச்சி துவக்க விழா கடந்த செப்., 8ம் தேதி வயலக்காவூர் ஏரிக்கரையில் துவங்கியது. இதில், ஒரே நாளில் 10,000க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஒரே நாளில் நடவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக சேர்க்காடு, பண்ருட்டி, திருவாங்கரணை ஏரிக்கரையிலும், வாலாஜாபாத் அரசு மருத்துவமனை வளாகத்திலும் பனை விதை நடவு செய்து, குறுங்காடு அமைக்க 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இதில், ஆறாவது வார களப்பணியாக சேர்க்காடு பூங்காவில் நேற்று பனை விதை நடவு செய்யப்பட்டதோடு, நிழல் மற்றும் கனி தரும் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.
இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட செயலர்வெங்கடேசன், மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்தார்.