/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மானாம்பதி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு
/
மானாம்பதி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு
ADDED : ஜூலை 02, 2025 11:21 PM

மானாம்பதி:மானாம்பதி ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை பங்களிப்புடன் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பிரதான சாலையோரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் பழம் மற்றும் நிழல் தரக்கூடிய மரக்கன்றுகளை நட ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்தது.
அதன்படி, வந்தவாசி செல்லும் சாலையோரத்தில் மானாம்பதி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில், இண்டோகூல் காம்போசைட் தனியார் தொழிற்சாலை பங்களிப்பில், பழம் மற்றும் நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மானாம்பதி ஊராட்சி தலைவர் ராதா தலைமை வகித்தார். இண்டோகூல் காம்போசைட் தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் ராமசந்திரன், ஊராட்சி துணைத்தலைவர் தரணி பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
அதில், பழம் மற்றும் நிழல் தரக்கூடிய 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.