/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் சம்பா பருவத்திற்கு நாற்று விடும் பணி துவக்கம்
/
உத்திரமேரூரில் சம்பா பருவத்திற்கு நாற்று விடும் பணி துவக்கம்
உத்திரமேரூரில் சம்பா பருவத்திற்கு நாற்று விடும் பணி துவக்கம்
உத்திரமேரூரில் சம்பா பருவத்திற்கு நாற்று விடும் பணி துவக்கம்
ADDED : நவ 29, 2024 12:10 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அம்மையப்பநல்லூர், மானாம்பதி, மருத்துவம்பாடி, காவாம்பயிர், புல்லம்பாக்கம், வயலாக்காவூர் உட்பட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில், சம்பா பருவ நெல் சாகுபடிக்காக, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாற்று விடுவது வழக்கம்.
ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், ஏரி மற்றும் திறந்தநிலை கிணறுகளில், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இதனால், சம்பா பருவத்திற்கு, நெல் நடவு செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
நேற்று உழவு செய்த நிலத்தில், நாற்று விடும் பணிக்கு நெல் துாவி வருகின்றனர்.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது:
உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதியில், அடிக்கடி மழை பெய்து வருவதால், ஏரிகளில் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது.
இதை நம்பி, நாற்று விடுவதற்கு முடிவு செய்து, பணிகள் துவக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.