/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேரித்தாங்கல் கலங்கல் சேதம் தடுப்பாக பனை மரங்கள் வைப்பு
/
சேரித்தாங்கல் கலங்கல் சேதம் தடுப்பாக பனை மரங்கள் வைப்பு
சேரித்தாங்கல் கலங்கல் சேதம் தடுப்பாக பனை மரங்கள் வைப்பு
சேரித்தாங்கல் கலங்கல் சேதம் தடுப்பாக பனை மரங்கள் வைப்பு
ADDED : மே 20, 2025 12:50 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, சிறுவள்ளூர் சேரித்தாங்கல் கிராமத்தில் இருந்து, புதுநகர் இடையே சேரித்தாங்கல் கிராம சிற்றேரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால், சேரித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களுக்கு நீர் பாசனம் செய்யப்படுகிறது.
இந்த ஏரியில் நிரம்பி வழியும் உபரி நீர், மம்மந்தாங்கல் கிராம ஏரியை சென்றடைகிறது. இந்த உபரிநீர் வழிந்து செல்லும் கலங்கலுக்கு போதிய தடுப்பு இல்லை.
இதனால், ஏரிநீர் வீணாகிவிடக்கூடாது என, விவசாயிகளே பனை மரங்களை தடுப்பாக போட்டுள்ளனர். கோடை முடிந்து தென்மேற்கு பருவ மழைக்காலத்தில், தடுப்பு வழியாக ஏரிநீர் வீணாகும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சேரித்தாங்கல் கலங்கலுக்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.