/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வல்லக்கோட்டையில் மரக்கன்றுகள் நடவு
/
வல்லக்கோட்டையில் மரக்கன்றுகள் நடவு
ADDED : நவ 27, 2025 04:46 AM

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் இடத்தில், கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார் வலர்கள் சார்பில், 108 மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், அறநிலையத் துறை மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வல்லக்கோட்டை முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலுக்கு சொந்தமாக 5 ஏக்கர் இடத்தில், 5,000 மரக்கன்றுகள் நட, கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன் ஒரு பகுதியாக, விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் திருவேணி அகாடமி மாணவ - மாணவியர் ஒன்றிணைத்து, முதற்கட்டமாக மகாகனி, வேங்கை வகைகளை சேர்ந்த, 108 மரக்கன்றுகள் நேற்று முன்தினம் நடப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.
இதில், கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ், விதைகள் தன்னார்வ அமைப்பின் பசு மை சரவணன் மற்றும் திருவேணி அகாடமி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

