/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெடுஞ்சாலை மையத்தடுப்பில் பராமரிப்பு இன்றி கருகும் செடிகள்
/
நெடுஞ்சாலை மையத்தடுப்பில் பராமரிப்பு இன்றி கருகும் செடிகள்
நெடுஞ்சாலை மையத்தடுப்பில் பராமரிப்பு இன்றி கருகும் செடிகள்
நெடுஞ்சாலை மையத்தடுப்பில் பராமரிப்பு இன்றி கருகும் செடிகள்
ADDED : ஜூலை 23, 2025 12:33 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் நெடுஞ்சாலை மையத் தடுப்பில் நடப்பட்டுள்ள செவ்வரளி செடிகள் பராமரிப்பு இல்லாததால் கருகி வருகின்றன.
உத்திரமேரூர் -- மானாம்பதி நெடுஞ்சாலை 32 கி.மீ., துாரமுடையது. இந்த சாலையை பயன்படுத்தி தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இருவழிச் சாலையான இச்சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே, இச்சாலையை நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2022ல், 55 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, நெடுஞ்சாலையின் நடுவே மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அதில், வாகனங்கள் வெளியிடும் புகையில் இருந்து கார்பன் துகள்களை உள்வாங்கி, துாய காற்றை வெளியிடும் செவ்வரளி செடி நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, உத்திரமேரூர் பகுதியில் நடப் பட்டுள்ள செவ்வரளி செடிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளன. செடிகளுக்கு அவ்வப்போது தண்ணீர் பாய்ச்சாமல் நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
மூன்று மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், செவ்வரளிச் செடிகள் உலர்ந்து வருகின்றன.
எனவே, நெடுஞ்சாலை மையத் தடுப்பில் நடப்பட்டுள்ள செவ்வரளிச் செடிகளை முறையாக பராமரிக்க, நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.