செடிகளால் துார்ந்த வடிகால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகளால் துார்ந்த வடிகால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : செப் 27, 2026 04:31 PM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: புத்தேரி ஊராட்சியில், செடிகள் வளர்ந்து துார்ந்துள்ள மழைநீர் வடிகாலை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பிரதான சாலையில் அப்பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
வடிகால் முறையாக பராமரிக்காததால், செடிகள் வளர்ந்து துார்ந்துள்ளன. பலத்த மழை பெய்தால், வடிகாலில் நீரோட்டம் தடைபடும். அதனால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், புத்தேரி ஊராட்சியில், செடிகள் வளர்ந்து துார்ந்துள்ள மழைநீர் வடிகாலை துார்வாரி சீரமைக்க புத்தேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
