செடிகளால் துார்ந்த வடிகால்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகளால் துார்ந்த வடிகால்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : நவ 28, 2026 08:28 PM

காஞ்சிபுரம்: செவிலிமேடு பிரதான சாலையோரம், செடிகளால் துார்ந்த வடிகாலை துார்வாரி சீரமைக்காததால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு பிரதான சாலையை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வடிகாலை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், செடிகள் வளர்ந்து துார்ந்துள்ளது.
இதனால், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்தால், வடிகால் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்குள் செவிலிமேடு பிரதான சாலையோரம், செடிகள் வளர்ந்து துார்நதுள்ள வடிகாலை முழுமையாக துார்வாரி சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ-ன, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
