/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்
/
கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்
கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்
கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளால் சிற்பங்கள் சேதமாகும் அபாயம்
ADDED : நவ 06, 2025 11:14 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் சேதமாகும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஆலடி பிள்ளையார் கோவில் அருகில், பணாமுடீஸ்வரர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சோமவாரம், பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, மாத சிவராாத்திரி, மஹா சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ராஜகோபுரத்தில் இரு இடங்களில் அரசமர செடிகள் வளர்ந்துள்ளன. இச்செடிகள் வேரூன்றி வளர்வதால், நாளடைவில் சிற்பங்கள் சேதமடைவதோடு, கோபுரமும் வலுவிழக்கும் சூழல் உள்ளது.
எனவே, காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தின் மீது இரு இடங்களில் வளர்ந்துள்ள அரச மரச் செடிகளை வேருடன் அகற்ற ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.