மழைநீர் கால்வாயில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சீர்கேடு
மழைநீர் கால்வாயில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் சீர்கேடு
ADDED : மார் 12, 2026 05:54 AM

அ நிறம் | அளவு
வ ல்லக்கோட்டை முருகன் கோவில் கார் பார்க்கிங் அருகே மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசேஷ நாட்களில் பக்தர்கள், அன்னதானம் அளித்து வருகின்றனர்.
அதன்பின், குடிநீர் கேன், அன்னதான தட்டு உள்ளிட்டவற்றை மழைநீர் கால்வாயில் வீசி செல்கின்றனர். இதனால், மழைநீர் கால்வாய் முழுதும் குப்பைகளாக நிறைந்து உள்ளன.
இதனால், அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், நோய் தொற்று பரவும் அச்சமும் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, கோவில் அருகே உள்ள மழைநீர் கால் வாயில் குவிந்துள்ள குப்பை கழிவுகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.
- டி. ஏழுமலை, வல்லக்கோட்டை.
