தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பிளாஸ்டிக் குப்பைகளால் துார்ந்த வடிகால்வாய் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு

 பிளாஸ்டிக் குப்பைகளால் துார்ந்த வடிகால்வாய் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு

 பிளாஸ்டிக் குப்பைகளால் துார்ந்த வடிகால்வாய் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு


ADDED : பிப் 06, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லம் ஊராட்சியில் வடிகால்வாயில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக வடியாமல் தேங்கி நிற்கிறது.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால், 1,000க்கும் மேற்பட்ட வடமாநில ஊழியர்கள், இங்கு வாடகைக்கு தங்கி, இங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்குள்ள வாடகை குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பைகளை, ஊராட்சி நிர்வாகம் முறையாக கையாள்வது இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், இப்பகுதி மக்கள், அருகே உள்ள காலி இடங்கள் மற்றும் வடிகால்வாய் ஓரங்களில் குப்பைகளை கொட்டுகின்றனர்.

அவை, வடிகால்வாய் முழுதும் துார்ந்து போகும் அளவிற்கு நிறைந்து உள்ளது. இதனால், வடிகால்வாயில் விடப்படும் வீட்டு உபயோக கழிவுநீர், சீராக வடியாமல் தேங்கி நிற்கிறது.

அவ்வப்போது, வடிகால்வாய் முழுதும் கழிவு நீர் நிரம்பி, சாலையில் வழிகிறது. இதனால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

எனவே, வீடுகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற, ஊராட்சி நிர்வாகத்தினர் தனி கவனம் செலுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us