/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மஞ்சள் நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ADDED : டிச 04, 2025 04:28 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருக்காலிமேடில், மஞ்சள் நீர் கால்வாய் சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுளால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக சென்று நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இந்நிலையில், கால்வாயில் அடித்து வரப்பட்ட பாலீத்தின் கவர், பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பை கழிவுகள், திருக்காலிமேடில் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில், குவியலாக உள்ளதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை உள்ளது.
எனவே, திருக்காலிமேடில், மஞ்சள் நீர் கால்வாய் சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில் குவிலாக உளள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.